இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்

7 hours ago 4

பெங்களூரு,

கர்நாடக மாநில இந்து ஜாகரணா வேதிகே எனும் இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகியாக இருந்து வருபவர் சமித் ராஜ் தரகுட்டே. இவர் தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமித்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே சமித் ராஜும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சமித் ராஜின் செல்போனில் இருந்த தகவல்கள் குறித்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் கடலோர மாவட்ட பகுதிகளில் அரசியல் தலைவராக வலம் வரும் ஒரு முக்கிய நபரின் ஆபாச வீடியோவும் அதில் இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் சமித் ராஜுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டால் தான் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Read Entire Article