பவன் கல்யாணுக்கு சாக்லேட்... பிரதமர் மோடி செயலால் மேடையில் சிரிப்பலை

13 hours ago 5

அமராவதி,

ஆந்திர பிரதேச துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி அன்பின் வெளிப்பாடாக சாக்லேட் கொடுத்துள்ளார். அதனை புன்னகையுடன் பவன் கல்யாண் பெற்று கொண்டார். இந்த தருணத்தில் பிரதமர் மோடி, அவருடன் மேடையில் அமர்ந்திருந்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பலத்த சிரிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வுக்கு முன்பு, பவன் கல்யாண் அமராவதியில் நடந்த பொது கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார். அப்போது அவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் போன்ற தேசிய அளவிலான நெருக்கடியான சூழலில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரம் செலவிட்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.

பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் அமராவதி, உலக தரம் வாய்ந்த தலைநகராக உருமாறும் என்றார். எங்களுடைய இளைஞர்கள் இனி பெங்களூரு, சென்னை அல்லது ஐதராபாத் நகரங்களுக்கு வேலைவாய்ப்புகளை தேடி செல்ல வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்கு அமராவதியிலேயே வேலைவாய்ப்புகள் நிறைய கிடைக்க பெறும் என்றார்.

34 ஆயிரம் ஏக்கர் நிலங்களை நன்கொடையாக வழங்கிய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நான் தலைவணங்கி, வணக்கம் தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.

அமராவதியை தலைநகராக உருவாக்குவதற்காக நடந்த போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், தர்மத்திற்காக நின்றால், தர்மம் உங்களுக்காக நிற்கும் என அமராவதி விவசாயிகள் நிரூபித்துள்ளனர் என்று பவன் கல்யாண் பேசியுள்ளார்.

Read Entire Article