பழைய பென்ஷன் திட்டம் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்

2 weeks ago 3

 

நாகப்பட்டினம், ஜன.25: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் ராஜராஜசோழன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைமையிட செயலாளர் புஷ்பராஜ், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர் சங்க மாநில பொருளாளர் அருண்குமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட தொடர்பாளர் பாலசண்முகம் ஆகியோர் பேசினர். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த போவதாக வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழக அரசு நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post பழைய பென்ஷன் திட்டம் கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article