சென்னை: நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கும், செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்தான் இந்த வெற்றி. மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள், களத்துக்கு வராமல் ஓடிய காட்சியை முன்கூட்டியே பார்த்தது தமிழ்நாடு. அ.தி.மு.க. மக்கள் மனதில் இருந்து மெல்லமெல்ல மறைந்து மங்கிக் கொண்டிருக்கிறது என்பதே முழு உண்மை. அ.தி.மு.க. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாரான நிலையில் இங்கும் பதுங்கிவிட்டது என்று கூறினார்.
The post நல்லாட்சிக்கான நற்சான்றிதழ் ஈரோடு கிழக்கு வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.