உத்திரப் பிரதேசம்: அரசியலில் தன்னை தக்க வைத்துக்கொள்ள போராடினாலும் உத்திரப் பிரதேச இடைத்தேர்தலில் பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி இருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. உத்திரப் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கோடு இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதன் வாக்கு வங்கி ஒற்றை இலக்கத்துக்கு சரிந்தது.
பட்டியலின மக்களின் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு சென்றதே இந்த படுதோல்விக்கு காரணம் என்கின்றனர் தேர்தல் புள்ளி விவரங்கள். இழந்த வாக்குகளை மீட்கவும், பகுஜன் சமாஜின் எதிர்காலத்தை உறுதி செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார் மாயாவதி. அதற்காக நடைபெறவுள்ள உத்திரப் பிரதேச இடைத்தேர்தலில் தனது பழைய பாணியை கையில் எடுத்து இருக்கிறார்.
பாஜக-விற்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள நான்கு தொகுதிகளில் முன்னேறிய வகுப்புகளை சேர்ந்தவர்களை வேட்பாளராக்கி இருக்கிறது பகுஜன் சமாஜ். 4 பேரில் இருவர் பிராமண சமூதாயத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் ராஜ்புத் சமூகத்தையும், மற்றொருவர் வைசிய சமூகத்தையும் சேர்ந்தவர். பட்டியலின வாக்குகளை அடிப்படையாக கொண்ட பகுஜன் சமாஜ், அச்சமூக வாக்குகளையும், வேட்பாளர்களையும் ஒன்றிணைக்கும் உத்திக்கு திரும்புவதாகவே அரசியல் விமர்சகர்கள் இதை கருதிகின்றனர். மாயாவதியின் இந்த உத்தி சமாஜ்வாதி கட்சியையும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
The post பழைய பாணியை கையில் எடுத்த மாயாவதி.. 4 தொகுதிகளில் முன்னேறிய வகுப்பினர்: பாஜகவிற்கு செக் வைத்த பகுஜன் சமாஜ் கட்சி appeared first on Dinakaran.