புதிதாக அமைய உள்ள பாஜ ஆட்சியில் முதல்வராக பதவியேற்கப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 5 தலைவர்கள் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.
* பர்வேஷ் வர்மா: புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை வீழ்த்தியவர். 2 முறை எம்பியாக இருந்தவர்.
* விஜேந்தர் குப்தா: ஆம் ஆத்மி ஆதிக்கம் நிலவிய முந்தைய தேர்தல்களிலும் ரோகினி தொகுதியில் வென்றவர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்.
* மஜிந்தர் சிங் சிர்சா: சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். பஞ்சாப்பிலும் வலுவான ஆதரவை பெற்றுள்ளவர்.
* துஷ்யந்த் கவுதம்: பாஜ தேசிய பொதுச் செயலாளர், தலித் தலைவர்.
* ஹரிஷ் குரானா: டெல்லியின் முன்னாள் முதல்வர் மதன்லால் குரானாவின் மகன். டெல்லி பாஜவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கி எம்எல்ஏ ஆகி உள்ளார்.
* டெல்லி தேர்தலில் வென்ற 5 பெண்கள்
டெல்லி தேர்தலில் முதல்வர் அடிசி, கல்காஜி தொகுதியிலும், பா.ஜவை சேர்ந்த ரேகா குப்தா, ஷாலிமார் பாக் தொகுதியிலும், பூனம் சர்மா, வாசிர்பூர் தொகுதியிலும், நஜாப்கார்க் தொகுதியில் நீலம் பெகல்வானும், கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் ஷிகா ராயும் வெற்றி பெற்றனர்.
The post அடுத்த முதல்வர் போட்டியில் 5 பேர் appeared first on Dinakaran.