மதுபான ஊழல் பணத்தாசை வந்தது கெஜ்ரிவால் மாறியதால் தேர்தலில் தோல்வி: அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

2 hours ago 2

மும்பை: சமூக ஆர்வலரும், அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் குருவுமான அன்னா ஹசாரே கூறியதாவது, “கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டு, அதனால் பணம் மீது கவனம் செலுத்தினார். அது ஆம் ஆத்மி, கெஜ்ரிவாலின் பிம்பத்தை கெடுத்து விட்டது. கெஜ்ரிவால் தூய்மையான குணம் உடையவர் என்று நம்பிய மக்கள் அவர் மதுபானம் பற்றி பேசுவதை பார்த்தார்கள்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தன்னலமின்றி, மக்களுக்கு சேவை செய்பவராகவும், தியாகத்தின் நற்பண்புகளை அறிந்து கொள்பவராக இருக்க வேண்டும். அவமானங்களை பொறுத்து கொள்ளும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த குணங்கள்தான் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் தங்களுக்கு ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்கும். தன்னலமின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தை ஆம் ஆத்மியும், கெஜ்ரிவாலும் புரிந்து கொள்ள தவறியதே தோல்விக்கு காரணம்” என கடுமையாக குற்றம்சாட்டினார்.

The post மதுபான ஊழல் பணத்தாசை வந்தது கெஜ்ரிவால் மாறியதால் தேர்தலில் தோல்வி: அன்னா ஹசாரே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article