பழமையான மரம் முறிந்து விழுந்தது

3 months ago 17

சென்னை: தி.நகர் பர்கிட் சாலையில் பல ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று, கனமழை காரணமாக நேற்று அதிகாலை முறிந்து சாலையின் இடையே விழுந்தது. இதனால் பர்கிட் சாலையில் நேற்று மதியம் வரை போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முறிந்த மரத்தை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மரம் அறுக்கும் மின் இயந்திரம் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். அதிகாலையில் மரம் விழுந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. மரம் அகற்றப்பட்டதை தொடர்ந்து பர்கிட் சாலையில் போக்குவரத்து சீரானது.

The post பழமையான மரம் முறிந்து விழுந்தது appeared first on Dinakaran.

Read Entire Article