சென்னை, ஜன. 11: பழநி அருகேயுள்ள பாலாறு, பொருந்தலாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக ஜன.13ல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழநி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து இடது பிரதான கால்வாயின் (புதிய ஆயக்கட்டு) புன்செய் பாசன நிலங்களுக்கு 13.01.2025 முதல் 03.05.2025 வரை 110 நாட்களுக்கு, வினாடிக்கு 70 கன அடி என மொத்தம் 665.30 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) முறைப்பாசனம் மூலம் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் பழநி வட்டத்திலுள்ள 9,600 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.
The post பழநி பாலாறு அணையில் ஜன.13ல் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.