ஊட்டி,மார்ச்29: ஊட்டி அருகேயுள்ள கல்லக்ேகாடு மந்து பகுதியில் வசித்து வந்தவர் கேந்தோர் குட்டன். இவர், கடந்த 26ம் தேதி வீட்டின் அருகேயுள்ள வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற போது, வன விலங்கு தாக்கி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, கேந்தோர் குட்டன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை, அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில்நீலகிரி எம்பி., ராசா நேற்று கல்லக்கோடு மந்து பகுதிக்கு சென்றார்.
அங்கு, கேந்தோர் குட்டன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சத்தை அவரது சகோதரரிடம் வழங்கினார். தொடர்ந்து, தோடர் பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பல்வேறு குறைகளையும் பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.
மேலும், வன விலங்குகளின் தொல்லைகளில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எம்பி., ராசா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், நீலகிரி கோட்ட வன அலுவலர் கவுதம், திமுக.,மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, திமுக., உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் முபாரக், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post பழங்குடியின வாலிபர் குடும்பத்திற்கு ராசா எம்பி., ரூ.1 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.