மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என முதல்வரிடம் நேரில் முறையிட்ட இல்லதரசிகளுக்கு உடனடி தீர்வு: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

4 hours ago 2

சென்னை: மகளிர் உரிமை தொகை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என முதல்வரிடம் முறையிட்ட இல்லதரசிகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தில் சமீபத்தில் நடந்த அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை அளித்து விட்டு, காரில் புறப்பட்டு செல்லும் போது, அவ்வழியாக பொதுமக்களுடன் நின்று கொண்டிருந்த 2 இல்லதரசிகள் தங்களுக்கு முறையாக விண்ணப்பித்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை, என முறையிட்டனர்.

உடனே, அருகில் இருந்த நிர்வாகியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்து, அமைச்சர் தாே.மோ.அன்பரசனிடம் கூறி, இவர்களது விண்ணப்பத்தை பரிசோதித்து, உரிமை தொகை பெறுவதற்கான வழிவகை செய்ய வேண்டும், என உத்தரவிட்டார். மேலும், அங்குள்ள சாலை மின் விளக்கு எறியாமல் இருப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை முன்வைக்க, அதனை உடனடியாக சரிசெய்து தர முதல்வர் உத்தரவிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என முதல்வரிடம் நேரில் முறையிட்ட இல்லதரசிகளுக்கு உடனடி தீர்வு: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article