பழங்குடிகள் இடஒதுக்கீட்டை வாக்கு வங்கிக்கு தரும் காங். : ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரசாரம்

2 weeks ago 3


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாக்க இடஒதுக்கீடு வழங்குவதை அம்பேத்கர் உறுதி செய்தார். ஆனால் அதை நேரு எதிர்த்தார். நேருவுக்குப் பிறகு காந்தி குடும்பம் அதிகாரத்தில் இருக்கும் வரை இடஒதுக்கீட்டை எதிர்த்தது. இப்போது மீண்டும் அவர்கள் இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக வெளிப்படையாக அறிவித்துள்ளனர். பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து அவர்களது வாக்கு வங்கியிடம் ஒப்படைப்பார்கள். இதுதவிர இன்னொரு வியூகத்தையும் அவர்கள் வகுத்துள்ளார்கள்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப் போகிறார்கள். இதன் மூலம் பழங்குடியினர், தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் இடஒதுக்கீடு நிறுத்தப்படும். காங்கிரசின் இந்த சதிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இங்கு வங்கதேச ஊடுருவல்காரர்கள் போலி அடையாள ஆவணங்களை உருவாக்க உதவுவதன் மூலம் ஆளும் ஜேஎம்எம் அரசு பழங்குடியினரின் அடையாளம், கண்ணியம் மற்றும் இருப்பிடத்தை பணயம் வைக்கிறது. ஊடுருவல்காரர்கள் உங்கள் மகள்களை பறித்து, நிலத்தை அபகரித்து உணவை தின்று கொண்டிருக்கிறார்கள். ஜார்க்கண்டின் மக்கள்தொகையை மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. ஜார்கண்டில் பாஜ ஆட்சி அமைத்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ2000 உதவித் தொகை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பழங்குடிகள் இடஒதுக்கீட்டை வாக்கு வங்கிக்கு தரும் காங். : ஜார்க்கண்டில் பிரதமர் மோடி பிரசாரம் appeared first on Dinakaran.

Read Entire Article