பள்ளியில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு

3 months ago 22

மதுரை,

மதுரை மாவட்டம் கட்டகுளத்தை சேர்ந்தவர் அழகர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள். இதில் மூத்த மகள் ஆனந்தி வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வழக்கம்போல் ஆனந்தி நேற்று காலை பள்ளிக்கு சென்றார். காலை 9.15 மணியளவில் பள்ளி மைதானத்திற்கு மாணவிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று ஆனந்தி மயங்கி கீழே விழுந்தார். இதனால் பதறிய சக மாணவிகள் ஆசிரியர்களிடம் ஓடிச்சென்று கூறினர். இதையடுத்து ஆசிரியர்கள் மாணவியை உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article