நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு அபராதம் விதிப்பு

6 days ago 5

ஹாமில்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் அந்த அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article