உசிலம்பட்டி, ஜன. 11: மதுரை மூக்கையா தேவர் பிறந்த ஊரில் உள்ள பள்ளிக்கு, அவரது பெயர் சூட்டப்படும் என அறிவித்த தமிழக அரசுக்கு, பார்வர்ட் பிளாக் தினகரன் பிரிவு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய பார்வர்ட் பிளாக் (தினகரன் பிரிவு) மாநில பொது செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கை: தமிழக சட்டபேரவை கேள்வி நேரத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழக செய்தித்துறை அமைச்சர் பெ.சாமிநாதன், மூக்கையாதேவர் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் பாப்பாபட்டி அரசு கள்ளர் பள்ளிக்கு, அவரது பெயர் சூட்டப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதை கனிவுடன் ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக முதல்வரை விரைவில் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post பள்ளிக்கு பெயர் சூட்டல் அறிவிப்பு தமிழக அரசுக்கு நன்றி appeared first on Dinakaran.