
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 40). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பள்ளி நிர்வாகத்தினர் அவரை பணியில் இருந்து நிறுத்தி விட்டனர். இருப்பினும் தொடர்ந்து அந்த பள்ளி மாணவியிடம் பழகி வந்த தனபால் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தனபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.