பள்ளி மாணவி ஐந்து மாத கர்ப்பம்: ஆட்டோ டிரைவர் மீது போக்சோ

1 day ago 5

பெரம்பூர்: பள்ளி மாணவி ஐந்து மாதம் கர்ப்பமானது தொடர்பாக ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3வது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இவர், கடந்த மாதம் 22ம்தேதி கடைக்கு செல்வதாக சென்றவர் பின்னர் திரும்பவில்லை. இதுசம்பந்தமாக சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் விசாரித்தனர். அப்போது பள்ளி மாணவி யார், யாருடன் பழகினார் என்ற விவரங்களை சேகரித்தனர். இதில், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித் (23) என்பவருடன் மாணவி நெருங்கி பழகி வந்துள்ளது தெரிந்தது.

அவரை பற்றி விசாரித்தபோது மாணவி மாயமான அன்று அவரும் மாயமானது தெரிந்தது. இதையடுத்து அவர்களை தேடிவந்த நிலையில், நேற்று 2 பேரையும் கண்டுபிடித்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவி பள்ளிக்கு செல்லும்போது ரஞ்சித்துடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக இருந்துள்ளார். இதன்காரணமாக மாணவி தற்போது 5 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி விசாரித்தனர். ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post பள்ளி மாணவி ஐந்து மாத கர்ப்பம்: ஆட்டோ டிரைவர் மீது போக்சோ appeared first on Dinakaran.

Read Entire Article