இஸ்தான்புல்: ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 2022ல் இருந்து போர் நடந்து வரும் நிலையில், 3 ஆண்டில் முதல் முறையாக இரு நாடுகள் இடையே துருக்கி இஸ்தான்புல்லில் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துருக்கி வந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் கடைசி நேரத்தில் வரவில்லை. இதனால் ஜெலன்ஸ்கி இஸ்தான்புல் செல்லாமல் தலைநகர் அங்காராவிலேயே தங்கினார். உக்ரைன் சார்பில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரஸ்தம் உமிரோவ் தலைமையிலான குழுவும், ரஷ்யா தரப்பில் புடினுக்கு நம்பகமான வரலாற்று ஆசிரியரும் முன்னாள் அமைச்சருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழுவும் நேற்று இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரையிலும் பேச்சுவார்த்தை தொடங்கப்படாததால் இன்றைக்கு தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
The post துருக்கியில் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை தாமதம்? appeared first on Dinakaran.