பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

1 month ago 3

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரத் துறையின் களப்பணிகளில் முழுமையாக பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதில், கிராம, பகுதி, சுகாதார செவிலியர்களுக்கு களப்பணிகளை மேம்படுத்திட வேண்டும். அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். களப்பணிகள் மூலம் துணை சுகாதார மையத்தை மேம்படுத்த வேண்டும்.

தாய்-சேய் நலப்பணிகள், தடுப்பூசி பணிகள் உள்ளிட்ட பணிகள் வாயிலாக கிராமப்புற மக்களின் குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகள், வளர் இளம் பெண்களின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்திட மக்களுக்கு கிடைத்திடும் பொது சுகாதார சேவைகளில் மேலும் ஒரு மைல்கல்லை உருவாக்கிட பெண் கள ஊழியர்களைப் பாதுகாத்திட வேண்டும். பொது சுகாதாரத் துறையில் களப்பணிகளில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு குறைந்தது 28 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்தபிறகுதான் அடுத்த நிலை பதவி உயர்வு பகுதி சுகாதார செவிலியர் பணியிடம் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழவதும் கூடுதல் பணி பளுவால் கிராம சுகாதார செவிலியர்களும், பகுதி சுகாதார செவிலியர்களும், சமுதாய நல செவிலியர்களும் சிரமமான கூடுதல் பணிச் சூழலில் உள்ளனர். பொது சுகாதாரத் துறையின் எம்ஆர்எம்பிஎஸ் பணிகள், பிக்மி ஆன்லைன் பணிகள், 2.0 வெர்ஷன் செயலியில் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் எவ்வித கருத்தும் கேட்காமலேயே 3.0 வெர்ஷன் செயலிக்கு மாற்றப்பட்டு, நாள்தோறும் ஒரு மாற்றத்தை புகுத்தி நிர்பந்தித்து பணிகள் கொடுக்கப்படுகிறது.

ஆனால் இதுவரை கூடுதல் பொறுப்பு படி வழங்கப்படாமல் அச்சுறுத்தியே ஆன்லைன் பணிகள், அறிக்கை பணிகள், முகாம் பணிகள், மக்கள் நலத்திட்ட பணிகள் அனைத்தையும் பெற்றுவருகின்றனர். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து தமிழக அரசிற்கு சென்றடையும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article