பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

4 months ago 12

உசிலம்பட்டி, ஜன. 8: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பால் உற்பத்தியாளர்கள் மையத்தின் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பாண்டி, வெண்மணி சந்திரன், மானூத்து மகேந்திரன், ஜெயபாண்டி ஆகியோர் தலைமையில் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பால்கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்னிறுத்தப்பட்டது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம்எக்ஸ் ஒன்றிய செயலாளர் முருகன், விக்கிரமங்கலம் ரவி, கேசம்பட்டி ஜெயக்குமார், வடக்கம்பட்டி குருசாமி, வடக்கம்பட்டி ரவி, கருமாத்தூர் ஜெயராஜ், தளபதி, ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article