சுகவனேஸ்வரர் கோயிலில் ஜூன் 9ல் தேரோட்டம்

4 hours ago 4

சேலம், மே 24: சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக தேரோட்டம் நடக்கும். அப்போது உற்சவர்கள் சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் தேரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர். நடப்பாண்டு வைகாசி விசாக தேரோட்டம் ஜூன் 9ம்தேதி நடக்கிறது. இவ்விழாவையொட்டி கடந்த 12ம் தேதி விநாயகர் பூஜை தேர் முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. வரும் 31ம் தேதி காலை 6 மணிக்கு ரத விநாயகர் பூஜையும், ஜூன் 1ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 5ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை சுவாமி, அம்மன் திருக்கல்யாண உற்சவமும், 9ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் உலா நடக்கிறது. 10ம் தேதி காலை நடராஜர் தேர்கால் தரிசனமும், மாலை 5 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது. 12ம் தேதி சத்தாபரணமும், 13ம் தேதி வசந்த உற்சவமும், 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post சுகவனேஸ்வரர் கோயிலில் ஜூன் 9ல் தேரோட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article