ஓமலூர், மே 24: மாநில அளவிலான சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் கரூர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தனி நபர் ஆடவரில் கரூர், மகளிரில் வேலூர் அணிகள் முதலிடம் பிடித்தன.
ஓமலூரில் 16வது சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய போட்டியில் 22 மாவட்ட அணிகள் மூலம் 300 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில், ஆடவர் தனி நபரில் கரூர் கீர்த்தி விஷால் தங்கமும், கரூர் சிவப்பிரகாஷ் வெள்ளியும், சேலம் தனுஷ், வேலூர் நிதின் வெண்கலமும் வென்றனர். மகளிரில் வேலூர் நருமுகை தங்கமும், சேலம் நிஷாலினி வெள்ளியும், திருப்பூர் ஹேமவர்ஷினி, வேலூர் மதி வெண்கலமும் வெற்றனர். இரட்டையர் ஆடவரில் வேலூர் முதலிடமும், கரூர், சேலம் இரண்டாம், மூன்றாம் இடமும் பிடித்தன.
மகளிரில் கரூர் முதலிடமும், சேலம் 2ம் இடமும், வேலூர் 3ம் இடமும் பிடித்தன. கலப்பு இரட்டையரில் கரூர் முதலிடமும், சேலம் 2ம் இடமும், வேலூர் 3ம் இடமும் பிடித்தது. குழு போட்டி ஆடவரில் கரூர் முதலிடமும், சேலம் 2ம் இடமும், வேலூர், கடலூர் 3ம் இடமும் பிடித்தன. மகளிரில் வேலூர் முதலிடம், கரூர் 2ம் இடமும், சேலம், கடலூர் 3ம் இடமும் பிடித்தது. இதில், கரூர் மாவட்டம் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. வேலூர் 2ம் இடத்தையும், சேலம் 3ம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள், அணிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
The post கரூர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் appeared first on Dinakaran.