பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற முயற்சி: மத்திய அரசு மீது அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு

1 week ago 2

யுஜிசி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றம் சாட்டியுள்ளார்.

யுஜிசி வரைவு அறிக்கை தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை மாநில உரிமையையும், மாநில கல்வி உரிமையையும் பறிப்பதாக அமைந்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தையும் முடக்க மத்திய அரசு சதி திட்டம் தீட்டுவது போல் தெரிகிறது. தன்னாட்சி அமைப்பான யுஜிசி மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. மாநில பல்கலைக்கழகங்களை யுஜிசி மூலம் கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருந்து வரும் நிலையில் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் யுஜிசி தனது அதிகார வரம்பை மீறியுள்ளது. இது மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்ட சவால்.

Read Entire Article