பல மணிநேரம் காத்திருந்து ஹாசனாம்பா கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

2 weeks ago 6

ஹாசன்: ஹாசனாம்பா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஹாசன் நகரத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில் ஆண்டு ஒருமுறை திறக்கப்படுகிறது. ஆண்டில் 9 நாட்கள் மட்டுமே ஹாசனாம்பா அம்மன் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் ஹாசனாம்பா கோயில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து வருகிறது. அவர்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையில், மக்கள் பிரதிநிதிகளும் படையெடுத்து வருகின்றனர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ஒன்றிய அமைச்சர்கள் எச்.டி.குமாரசாமி, சோமண்ணா, ராஜமாத பிரமோதாதேவி உள்டபட பலர் சாமி தரிசனம் செய்தனர். விஐபிக்கள் வருகையால் காத்திருக்க பக்தர்கள் அதிருப்தி குறிப்பிட்ட நாட்களில் விஐபிக்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஹாசனாம்பா கோயிலுக்கு சாமி தரிசனத்துக்கு விஐபிக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஒதுக்க வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யார் வந்தாலும் அந்த ஒதுக்கப்பட்ட நாட்களில் தரிசனத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போது சாதாரண பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்தாலும் பரவாயில்லை. தினந்தோறும் விஐபிக்கள் ஒவ்வொருவர் வரும் போது மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறது. அவர்கள் வரும் போது பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனால், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், கோயில் நிர்வகிக்கும் பொறுப்பை வருவாய்த்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை காவல் துறையினரிடம் வழங்க வேண்டும். 5-6 மணிநேரம் காத்திருப்பது தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது என்றனர்.

மாவட்ட கலெக்டரிடம் இன்ஸ்பெக்டர் வாக்குவாதம்: ஹாசனாம்பா கோயில் தரிசனத்தின் போது காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறை அதிகாரியை கண்டித்தார். கட்டுபாட்டு வாகனத்தை தடுத்ததால் மாவட்ட கலெக்டர் சத்தியபாமாவின் உதவியாளர் சசி மற்றும் சப்-இன்ஸ்பெக்டரிடையே மோதல் ஏற்பட்டு தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டரின் பி.ஏவை தள்ளியதாக எழுந்த குற்றச்சாட்டால் கலெக்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அரசு தலைமை செயலாளரிடம் கூறி சஸ்பெண்ட் செய்வதாக எச்சரிக்கைவிடுத்தார்.

இதனால், மேலும் கடுப்பான காவல்துறை அதிகாரி பொதுமக்கள் முன்னிலையிலேயே கலெக்டருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனுடன், மளவள்ளி இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் கலெக்டர் இடையே வாக்குவாதம் நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எங்களுடைய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவருக்கு சிகிச்சை கொடுங்கள் என இன்ஸ்பெக்டர் ரவி கலெக்டரிடம் கூறியுள்ளார். அனைத்து பிரச்னைக்கும் உங்கள் பி.ஏ தான் காரணம் என அவர் உரத்த குரலில் கூறியுள்ளார். இதனால், அங்கு சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அங்கிருந்து மாவட்ட கலெக்டர் அதிருப்தியுடன் வெளியேறியுள்ளார். சம்ப இடத்திற்கு மாவட்ட போலீஸ் எஸ்பி முகமது சுஜிதா வந்து விசாரித்துள்ளார்.

The post பல மணிநேரம் காத்திருந்து ஹாசனாம்பா கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article