காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் இன்று (மே 10) ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக போராடக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த உள்ளனர். இந்த விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்பட உள்ளதால், இந்த கிராமத்தை மையமாக வைத்து இத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 1019 நாளாக நடைபெற்றது.