பயணிகள் நடைபாதையில் காணப்படும் இரும்பு பைப்புகளை அகற்ற கோரிக்கை

1 month ago 3

நெல்லை : நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத்தினர் அதன் தலைவர் முகமது அயூப் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை சந்திப்பு ரயில் நிலைய புதிய கட்டிடத்திற்கு செல்லும் இடது பக்க பாதையில், அதாவது காமராஜ் சிலையிலிருந்து சற்று தூரத்தில் தரையில் இருந்து மேல் நோக்கி இரண்டு பைப்கள் உள்ளன. முழு கம்பத்தை அகற்றிட நினைத்தவர்கள் முழுமையாக அகற்றாமல் கம்பத்தை அறுத்து எடுத்து மீதமுள்ள பகுதியை அப்டியே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

இந்த பைப் தரையில் இருந்து நீட்டிக் கொண்டிருப்பதை அறியாத ரயில் பயணிகள், அவசரமாக ரயிலை பிடிக்கும் செல்லும்போது தடுமாற்றத்துடன் கீழே விழுந்து செல்வதை காண முடிகிறது. குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் கால்களில் இரும்பு பைப் பட்டு கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பைப்களை முழுமையாக அகற்றிட ஆவன செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பயணிகள் நடைபாதையில் காணப்படும் இரும்பு பைப்புகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article