சென்னை: அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில், காரில் ஏறும் போது பின் தொடர்ந்து நடிகர் ரிஷிகாந்தை சரமாரியாக தாக்கி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரிஷிகாந்த் நேற்று இரவு வந்துள்ளார். பிறகு ஓட்டலில் உள்ள பாரில் விடிய விடிய மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது பாரில் இசைக்கு ஏற்றப்படி நடனமாடுவது தொடர்பாக வாலிபர் ஹரிஷ் என்பவரை பார்த்து நடிகர் ரிஷிகாந்த் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாரிலேயே நடிகருக்கும் ஹரிஷ் என்ற வாலிபருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கும் நிலைக்கு சென்றுள்ளனர்.
அப்போது பாரில் பாதுகாப்பு பணியில் பவுன்சர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து நடிகர் ரிஷிகாந்த் ஓட்டலில் இருந்து தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டு செல்ல முயன்றார். அப்போது வாலிபர் ஹரிஷ், பின் தொடர்ந்து நடிகரின் காரை வழிமறித்து நடிகர் ரிஷிகாந்தை சரமாரியாக தாக்கினார். இதில் ரிஷிகாந்துக்கு லேசாக காயம் ஏற்பட்டது. இதையடுத்து நடிகர் ரிஷிகாந்த் சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சிசிடிவி காட்சிகளின் படி வாலிபர் ஹரிஷை கைது ெசய்தனர். இந்த சம்பவத்தால் இன்று அதிகாலை அண்ணா மேம்பாலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
The post அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் பாரில் போதையில் நடனமாடுவதில் நடந்த தகராறில் நடிகர் ரிஷிகாந்துக்கு அடி உதை: வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.