பயணிகளின் கவனத்திற்கு.. ஆவடி - மூர் மார்க்கெட் பயணிகள் ரெயில் சேவை ரத்து

8 hours ago 2

சென்னை,

சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள ஆந்திர மாநிலம் பெடபரியா- நாயுடுபேட்டா ரெயில் நிலைங்களுக்கு இடையே 24-ம் தேதி, 27ம் தேதி, மார்ச் 1 ம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை (8 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில பயணிகள் ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* மூர் மார்க்கெட்டில் இருந்து 24-ம் தேதி, 27ம் தேதி, மார்ச் 1 ம் தேதிகளில் காலை 5.40 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (வண்டி எண். 66029), மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் பயணிகள் ரெயிலும் (66030) ரத்து செய்யப்படுகிறது.

* சூலூர்பேட்டையில் இருந்து இதே தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும் (66035), நெல்லூரில் இருந்து இதே தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் (66036) ரத்து செய்யப்படுகிறது.

* ஆவடியில் இருந்து இதே தேதிகளில் காலை 4.25 மணிக்கு புறப்பட்டு மூர் மார்க்கெட் வரும் பயணிகள் ரெயில் (66000) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




 


Read Entire Article