சுகர் லெவல் ஏறும் என்ற பயம் வேண்டாம்.. தாராளமா இந்த பழத்தை சாப்பிடுங்க..!

4 hours ago 3

கொய்யா பழம் மற்றும் அதன் இலைகளில் உள்ள தனித்துவமான மருத்துவ குணங்கள் கொண்ட ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகுந்த நன்மைகளை தருகிறது. இந்தியா உட்பட சில உலக நாடுகளில் பல நூற்றாண்டுகளாக கொய்யா இலை டீ வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

100 கிராம் கொய்யாப்பழத்தில் 68 கலோரிகள், 14 கிராம் கார்போஹைட்ரேட், 9 கிராம் சர்க்கரை, 5 கிராம் நார்ச்சத்து, 417 மில்லிகிராம் பொட்டாசியம், 228 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட கொய்யா பழத்தில் 4 மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பி6, கால்சியம், லைகோபீன், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இதனுடைய கிளைசெமிக் இன்டெக்ஸ் 12 முதல் 24 வரை வேறுபடும். பழுக்காத கொய்யாக்காயின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 12. பழுத்த கொய்யா பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 24 ஆகும்.

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி இந்த பழத்தை உட்கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

கொய்யா பழங்களில் உள்ள வைட்டமின் ஏ கண்புரை அபாயத்தை தடுப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கொலேஜன் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது. கொய்யா பழத்தில் இருக்கும் கரோடெனாய்ட்ஸ், பாலிபினால்ஸ் போன்ற ஆண்டியாக்ஸிடன்ட்ஸ் செல்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.

இதிலுள்ள அதிக அளவு பொட்டாசியம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்தும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தும் இதயம் சிறப்பாக செயல்பட துணை புரிகிறது. அது மட்டுமல்ல, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடி வயிற்றில் ஏற்படும் தசை பிடிப்பு மற்றும் வலியை குறைக்கிறது. கொய்யாவை ஜூஸ் வடிவில் குடிப்பதை விட இயற்கையாகவோ, ஸ்மூத்தி அல்லது அதன் இலை சாறில் தயாரிக்கப்படும் டீயாகவோ பருகலாம். கொய்யா பழத்தைவிட கொய்யா காய் சிறந்தது.

 

Read Entire Article