கேரளாவில் பரவும் கொரோனா பாதிப்புகள் குறித்து கண்காணிப்பு-தமிழக சுகாதாரத்துறை

4 hours ago 3

சென்னை,

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 19-ந்தேதி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தமிழகத்தில் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது. இதற்கிடையே, கேரளாவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. குறிப்பாக, கொரோனாவில் என்னென்ன வகை பாதிப்புகள் கேரளாவில் வந்துள்ளது என்றும் ஆய்வு செய்து வருகிறோம். முன்னெச்சரிக்கையாக கேரள மாநில சுகாதாரத்துறையிடம் பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டுள்ளோம். தமிழகத்தில் முககவசம் கட்டாயம் இல்லை. காய்ச்சல், இருமல், உடல்நிலை பாதிப்பு உடையவர்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிந்துகொள்ள வேண்டும். இது வழக்கமாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article