"பன் பட்டர் ஜாம்" படத்தின் "தியா தியா" பாடல் வெளியானது

4 hours ago 2

சென்னை,

ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் போருக்கு மத்தியில் ராஜு பன் பட்டர் ஜாம் சாப்பிடும் படியான காட்சி இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

'ஏதோ பேசத்தானே' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை நடிகர் சித்தார்த்தும் 'காவாலா' புகழ் பாடகி ஷில்பா ராவும் பாடியுள்ளனர். இந்த பாடலை விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் 'தியா தியா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

The wait is over!♥️#DiyaDiya - the soul-soothing second single from #BunButterJam is OUT NOW ✨▶ https://t.co/WOOgZLXCJvA @nivaskprasanna musicalPenned by @iamKarthikNethaVocals by @sidsriramLet the music melt your heart :)@sureshs1202 @RMirdath @rajuactor91pic.twitter.com/GaQs1Sn6gv

— Rain Of Arrows Entertainment (@RainofarrowsENT) May 12, 2025
Read Entire Article