
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த என்.டி.ராமராவுக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர். சிவாஜி நடிப்பில் வெளியான 'கர்ணன்' படத்தில் கிருஷ்ணராக நடித்து கலக்கினார். கிருஷ்ணரை நினைத்தாலே என்.டி.ஆர். உருவம் நிழலாடும் வகையில் புகழ்பெற்றார்.
என்.டி.ஆரின் மகன்களான பாலகிருஷ்ணா, ஹரிகிருஷ்ணா ஆகியோரும் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள். இதில் ஹரிகிருஷ்ணாவின் மகன்களான ஜானகிராம், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரும் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஜானகிராமின் மகன் தாரக ராமராவும் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். ஒய்.வி.எஸ்.சவுத்ரி தயாரித்து, இயக்கும் புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக குச்சிப்புடி நடன கலைஞர் வீணா ராவ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி 'கிளாப்' அடித்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய மந்திரியும், என்.டி.ஆரின் மகளுமான புரந்தரேசுவரி கூறும்போது, சினிமா உள்ளவரை என்.டி.ஆரின் புகழ் மறையாது. தற்போது அவரது குடும்பத்தில் இருந்து 4-ம் தலைமுறையாகவும் நடிக்க வந்துவிட்டார். என்.டி.ஆரின் ரசிகர்கள் அவரை பார்த்துகொள்வார்கள்'' என்றார்.