பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

3 months ago 12

சென்னை,

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

அதன்படி நாளை முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும் என்று பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article