பதவி உயர்வு விவகாரம் பெரியார் பல்கலை பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

3 hours ago 1

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற்றால்தான், பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்க முடியும் என்று கடிதம் அனுப்பிய சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியாற்ற குழந்தைவேல் உள்ளிட்டோர், பணி உயர்வு கோரி கடந்த 2013ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்ைக விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த 2017ல் பிறப்பித்த உத்தரவில், பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வையும், அதற்கான பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை சேலம் பெரியார் பல்கலைகழகம் நிறைவேற்றவில்லை என்பதால் பல்கலைக்கழகத்திற்கு எதிராகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற்றால்தான் பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியலில் பெயர்களை சேர்க்க முடியும் என்று பல்கலைகழகம் பதிவாளர் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இதையடுத்து, எந்த வற்புறுத்தலும் இல்லாமல் இந்த பதவி உயர்வு பட்டியலில் தங்களை இணைக்க வேண்டும் என்று கோரி குழந்தைவேலு உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இது தொடர்பாக பெரியார் பல்கலைகழக பதிவாளர் வரும் மார்ச் 7 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post பதவி உயர்வு விவகாரம் பெரியார் பல்கலை பதிவாளர் நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article