சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் “உச்ச நீதிமன்ற தீர்ப்பு, மாநில அரசுகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் அவர் பேசும்போது, “ஆளுங்கட்சியான அதிமுக தவிர்த்து” என்று தவறுதலாக தெரிவித்தார். இதையடுத்து, “எதிர்க்கட்சி” என பேரவை தலைவர் மு.அப்பாவு மற்றும் திமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “பதற்றத்தில் இருக்கிறேன் நான். அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என்று சமாளித்து ரியாக்ட் செய்தார்.
தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்.8) காலை தீர்ப்பு வழங்கியது. அதன் முக்கிய அம்சங்கள்: > சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது, அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, அவர் ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.