இந்தியா-பாக். இடையே நேரடி பேச்சுவார்த்தை: அமெரிக்கா வலியுறுத்தல்

4 hours ago 2

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் தாமஸ் பிகோட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவ-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். அமைதிப் பாதையை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பாராட்டுகிறோம். அதிபர் டிரம்ப் கூறியது போல், இந்த போர் நிறுத்த முடிவு அவர்களின் வலிமை, அறிவு மற்றும் மன உறுதியை பிரதிபலிக்கிறது. பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதுகாக்க இரு தரப்பினரும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

பாகிஸ்தானுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நடத்திய பேச்சுவார்த்தையின் போது தீவிரவாத உள்கட்டமைப்புகளை அகற்றுவதாக பாகிஸ்தான் உத்தரவாதம் அளித்ததா என்ற கேள்விக்கு தாமஸ் பிகோட், ‘‘இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இஐடயே நேரடி தகவல்தொடர்பை ஊக்குவிக்க விரும்புகிறோம். அதில்தான் கவனம் செலுத்துகிறோம்’’ என்றார்.

வர்த்தகத்தை வைத்து சம்மதிக்க வைத்தேன்
இந்தியா, பாகிஸ்தான் இடையே போரை அமெரிக்கா தான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் 5வது முறையாக நேற்று முன்தினமும் கூறி உள்ளார். சவுதி அரேபியா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய டிரம்ப், விமானத்தில் அளித்த பேட்டியில், ‘‘நான் பிஸியாக இருந்தாலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக வர்த்தகத்தை தான் முக்கியமாக நான் பயன்படுத்தினேன். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகத்தை அதிகப்படுத்துவோம் என கூறினேன். இரு நாடுகளிலும் புத்திச்சாலியான தலைவர்கள் இருந்ததால் இது சாத்தியமானது’’ என்றார்.

The post இந்தியா-பாக். இடையே நேரடி பேச்சுவார்த்தை: அமெரிக்கா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article