ராமநாதபுரம், டிச.3: பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றக் கூடிய பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் வடிவேல்முருகன், பொருளாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தனர். இதில் 2012ம் ஆண்டில் பள்ளி கல்வித் துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து ரூ.12,500 ஊதியம் பெற்று வருகின்றோம், ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் டிச.10ம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். மேலும் சிறப்பாசிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
The post பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.