“பணக்கொழுப்பு” - பிரசாந்த் கிஷோரை விஜய் உள்ளிட்டோர் நாடுவதை விமர்சித்த சீமான்

2 hours ago 2

திருவண்ணாமலை: “நீங்கள் உடலில் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீர்கள். பணக்கொழுப்பு கேள்விப்பட்டுள்ளீர்களா? எப்படி ஒருவருக்கு வாய்க்கொழுப்பு அதிகம் என்று கூறுவோமோ, அதுபோல பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இதெல்லாம் தேவைப்படும். எனவே, அதைப்பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என்று விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்.12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தச் சந்திப்பு குறித்து ஊடக செய்திகள் மூலம் பார்த்து தெரிந்துகொண்டேன். தேர்தல் வியூக வகுப்புகளில் எல்லாம் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை.

Read Entire Article