தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சரண்யாவின் கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் கபிலன் மற்றும் குகன் உள்ளிட்ட 3 பேர் சரணடைந்த நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பதால் அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலனின் சொத்துகளை கபிலனுக்கு வழங்க சரண்யா எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.
The post பட்டுக்கோட்டையில் முன்னாள் பாஜக பெண் நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.