
டெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. 26 நாட்கள் அவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், கடந்த 4ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களின் வருகைப்பதிவு குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அதிகபட்சமாக திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கிரிராஜன், அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆகியோர் அனைத்து நாட்களும் (26 நாட்கள்) வருகை தந்துள்ளனர். குறைந்தபட்சமாக பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் 6 நாட்கள் மட்டுமே அவைக்கு வருகை தந்துள்ளார்.
தமிழக எம்.பி.க்கள் வருகைப்பதிவு விவரம்:
ப.சிதம்பரம் - 15 நாட்கள்
திருச்சி சிவா - 26 நாட்கள்
கல்யாண சுந்தரம் - 19 நாட்கள்
அந்தியூர் செல்வராசு - 15 நாட்கள்
சந்திர சேகரன் - 18 நாட்கள்
வி.சண்முகம் - 13 நாட்கள்
தர்மர் - 23 நாட்கள்
முகமது அப்துல்லா - 23 நாட்கள்
கிரிராஜன் - 26 நாட்கள்
ராஜேஷ்குமார் - 19 நாட்கள்
இளங்கோ - 20 நாட்கள்
கனிமொழி சோமு - 22 நாட்கள்
வைகோ - 20 நாட்கள்
எம்.சண்முகம் - 23 நாட்கள்
வில்சன் - 25 நாட்கள்
அன்புமணி ராமதாஸ் - 6 நாட்கள்
ஜி.கே.வாசன் - 24 நாட்கள்
தம்பிதுரை - 26 நாட்கள்