பட்ஜெட் அறிவிப்பால் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: நகை வாங்குவோர் கலக்கம்

2 hours ago 1

சென்னை: ஒன்றிய பட்ஜெட் எதிரொலியால் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.62,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.7,790க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது இதனால் நகை வாங்குவோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கடந்த மாதம் 22ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்று ஒரு சவரன் ரூ. 62,000-ஐ கடந்தது. சென்னையில் இன்று(பிப். 1) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 61,960-க்கு விற்பனையானது. இந்நிலையில் 2025-26ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று மாலை தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ.62,320-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.45 உயர்ந்து ரூ. 7,790-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. இப்படி தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்க நினைப்பதற்கே அச்சம் கொள்ளும் நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

The post பட்ஜெட் அறிவிப்பால் தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு: நகை வாங்குவோர் கலக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article