படி, படி என கூறியதால் தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பரபரப்பு

1 week ago 2

நெல்லை,: நெல்லை அருகே மேலப்பாளையம் கருங்குளம் அசோகபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(45). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு சகுந்தலா(42) என்ற மனைவியும், தங்கபாண்டி என்ற மகனும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகனான தங்கபாண்டி (18) பாளையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மகன் சரியாக படிக்கவில்லை எனக்கூறி தந்தை அடிக்கடி திட்டியதாக கூறப்படுகிறது. வீட்டுக்கும் மகன் சரியாக வருவதில்லை எனக்கூறி மகனை அடிக்கடி கடிந்து கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு நிலவி வந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மாரியப்பன் மீது கோபம் காரணமாக மகன் தங்கபாண்டி, பெரிய கல்லை தூக்கிப் போட்டுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தந்தையை கொன்ற மகன் தலைமறைவானதால், போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் புதிய பஸ்நிலையம் பகுதியில் பஸ் ஏற காத்திருந்த நிலையில், போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

The post படி, படி என கூறியதால் தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article