
சென்னை,
தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் 'டெஸ்ட்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் கடந்த 4-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
முன்னதாக இப்படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பட புரமோஷன்களில் நயன்தாரா பங்கேற்காதது பற்றி இயக்குனரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,
நடிகை நயன்தாரா காண்ட்ராக்டில் கையெழுத்து இடும்போதே பட புரோமோஷனில் பங்கேற்க மாட்டார் என்று இருப்பதாகவும், அவரது ஈடுபாடு அவ்வளவுதான் என்பது தனக்கு தயாரிப்பாளராக இருந்தபோதே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.