
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கரடகியில் கேரளாவை சேர்ந்த முகமது குட்டி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த பேக்கரிக்கு நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி சாக்லெட் வாங்க வந்தாள். அப்போது முகமது குட்டி, அந்த சிறுமிக்கு சாக்லெட் கொடுப்பதாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினார்.
இதனால் கோபம் அடைந்த அவர்கள் உறவினர்களுடன் வந்து, பேக்கரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து கரடகி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் பெற்றோர், முகமது குட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், முகமது குட்டியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.