பச்சை பட்டாணி பூரி

2 hours ago 1

தேவையான பொருட்கள்

பச்சை பட்டாணி – 500g
பட்டை – ஒரு பெரிய துண்டு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
இலவங்கம் – 2 பல்
கடலை மாவு – சிறிதளவு

செய்முறை:

கடலை மாவைத் தவிர பாக்கி எல்லாவற்றையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் ஒரு spoon எண்ணெய் ஊற்றி அதை உப்பு சேர்த்து கிளறவும். மிதமான தீயில் கிளற வேண்டும். சிறிது கட்டியான பிறகு கடலை மாவைத் தூவி நன்றாக கலக்கவும். அடுப்பை அணைக்கவும். Stuffing ரெடி ஆகி விட்டது.பூரிக்கு நீங்கள் கோதுமை மாவை அல்லது மைதா மாவை அல்லது இரண்டையும் கலந்து பிசைந்து கொள்ளலாம். மாவு பிசையும் போது சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசையவும். மாவு சிறிது நேரம் ஊறிய பின் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கொள்ளவும்.முதலில் பூரி அளவிற்கு இடவும். பிறகு அதில் stuffing மசாலாவை spoon ஆல் நிரவி, மூடி மறுபடியும் பூரி அளவிற்கு இடவும். மசாலாவை அதிகம் வைக்காதீர்கள், அதிகமாக வைத்தால் இடுவது கடினம். பிறகு அதை வாணலியில் பொரிக்கவும்.இந்த பூரியை சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 

The post பச்சை பட்டாணி பூரி appeared first on Dinakaran.

Read Entire Article