![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39042050-pattani-thiruttu.webp)
சென்னை,
துபாயிலிருந்து சென்னை துறைமுகம் வழியாக ரூ. 2 கோடி மதிப்புடைய பச்சை பட்டாணியை இறக்குமதி செய்த விவகாரத்தில் 3 சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மைசூர் பருப்பு எனக் கூறி ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மைசூர் பருப்பு என்று கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது வருவாய் புலனாய்வு போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 அதிகாரிகளை கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதியாளர்களான மேலும் 2 பேரையும் கைது செய்துள்ளர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.