கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

2 hours ago 1

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை, அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம் உடனிருந்தார்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article