![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39066443-1-afg-cri.webp)
காபூல்.
8 அணிகள் கலந்து கொள்ள உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடக்கிறது.
இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி களம் காண்கிறது. இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி ஹஸ்மத்துல்லா ஷாகிதி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் இளம் வீரரான அல்லா கசன்பர் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் தொடரின் போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமடைய குறைந்தது 4 மாதங்கள் ஆகும் என்பதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரராக இருந்த நங்யால் கரோட்டி 15 பேர் கொண்ட முதன்மை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.