பசிபிக் கடலில் வனுவாட்டு தீவு நாடு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

4 weeks ago 6

போர்ட் விலா: பசிபிக் கடலில் வனுவாட்டு தீவு நாட்டில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சுற்றியுள்ள தீவுகள், நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான வனுவாட்டுவில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தலைநகர் போர்ட் விலாவுக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவிலும், பூமிக்கடியில் 43 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு அப்பகுதியில் சுனாமி அபாயம் ஏற்படக்கூடும் என்று எச்சரித்த அதிகாரிகள், குடிமக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும், ராட்சத அலைகளுக்கு எதிராக கவனமாக இருக்கவும் கேட்டுக் கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் வசிப்பவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏதேனும் நில அதிர்வுகள் ஏற்படாதவாறு எச்சரிக்கையும் விடப்பட்டது.

The post பசிபிக் கடலில் வனுவாட்டு தீவு நாடு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article