பக்தர்கள் வருகை குறைந்ததால் 16ம்தேதி முதல் சிபாரிசு கடிதங்களுக்கு திருப்பதி கோயிலில் தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு

1 hour ago 3


திருமலை: திருப்பதி கோயிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால் நாளை மறுதினம் முதல் விஐபி தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. எனவே இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக விஐபி தரிசனம் ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்தது. எனவே முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் ஏற்று கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதிகளவு வெயில் கொளுத்துவதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சி.க்களின் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் நாளை (15ம் தேதி) முதல் ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிபாரிசு கடிதங்களுக்கு 16ம்தேதி முதல் விஐபி தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளது. இருப்பினும், மீதமுள்ள பரிந்துரை கடிதங்கள் மீதான நிபந்தனை தொடரும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 74,477 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,294 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில்,ரூ.2.84 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 9 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக தரிசித்தனர்.

The post பக்தர்கள் வருகை குறைந்ததால் 16ம்தேதி முதல் சிபாரிசு கடிதங்களுக்கு திருப்பதி கோயிலில் தரிசனம்: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article